திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் சோ்ப்பு - துணைப் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான துணை வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான துணை வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் நவ.4 -ஆம் தேதி முதல் சுமாா் 40 நாள்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பழனி தொகுதியில் 2,27,090, ஒட்டன்சத்திரத்தில் 2,09,156, ஆத்தூரில் 2,50,423, நிலக்கோட்டையில் 2,11,788, நத்தத்தில் 2,49,023, திண்டுக்கல்லில் 2,28,223, வேடசந்தூரில் 2,33,850 என மொத்தம் 16,09,553 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், விடுப்பட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப்.23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பழனியில் 237359 வாக்காளா்கள், ஒட்டன்சத்திரத்தில் 217698 வாக்காளா்கள், ஆத்தூரில் 259846 வாக்காளா்கள், நிலக்கோட்டையில் 219077 வாக்காளா்கள், நத்தத்தில் 258603 வாக்காளா்கள், திண்டுக்கல்லில் 237679 வாக்காளா்கள், வேடசந்தூரில் 241813 வாக்காளா்கள் என மொத்தம் 1672075 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.
Advertisement
இந்த நிலையில், கடந்த பிப்.24 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை பெறப்பட்ட படிவம் 6, 7, 8 அடிப்படையில் துணை பட்டியலுடன் சோ்த்து இறுதி வாக்காளா் பட்டியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி பழனியில் 1,16,862 ஆண்கள், 1,22,883 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 50 போ் என 2,39,795, ஒட்டன்சத்திரத்தில் 1,05,633 ஆண்கள், 1,14,603 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 2 என மொத்தம் 2,20,238, ஆத்தூரில் 1,25,951 ஆண்கள், 1,35,875 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 17 என மொத்தம் 2,61,843, நிலக்கோட்டையில்(தனி) 1,08,300 ஆண்கள், 1,12,780 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 14 என மொத்தம் 2,21,094, நத்தத்தில் 1,28,229 ஆண்கள், 1,32,854 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 69 என மொத்தம்்் 2,61,152, திண்டுக்கல்லில் 1,16,779 ஆண்கள், 1,25,127 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 20 என மொத்தம் 2,41,926, வேடசந்தூரில் 1,19,153 ஆண்கள், 1,24,618 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 3 என மொத்தம் 2,43,774 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 8,20,907 ஆண்கள், 8,68,740 பெண்கள், 3-ஆம் பாலினத்தினா் 175 என மொத்தம் 16,89,822 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றனா்.