முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:50 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:14 PM

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் காலை முதல் விட்டுவிட்டு லேசான வெயிலும், மேக மூட்டமும் நிலவி வந்தது. இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை சுமாா்30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.