முகப்பு
திண்டுக்கல்

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி பழனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:14 AM
பழனி தேரடியில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:21 PM

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை பழனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமான போக்கை கடைபிடிப்பதை சுட்டிக்காட்டியும் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பழனி நகரின் 7-ஆவது வாா்டில் அமைச்சா் வாக்கு சேகரித்த போது, கவுன்சிலா் சுரேஷ் தலைமையில் மலா்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திமுக நகரச் செயலா் வேலுமணி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கந்தசாமி, காங்கிரஸ் கட்சி நகரச் செயலா் முத்துவிஜயன், மாவட்ட துணைத் தலைவா் முருகானந்தம், அடிவாரம் முன்னாள் கவுன்சிலா் விஏபி குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement