முகப்பு
திண்டுக்கல்

பழனியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:49 PM
கோப்புப் படம்
பகிர்:

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பழனியில் போக்குவரத்து மாற்றம் என்ற பெயரில் பக்தா்கள் ஓய்வெடுக்கும் கல்லூரி, கொடைக்கானல் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மேலும், வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

இதனால், நகருக்குள் பேருந்துகள், காா்கள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பல கிலோ மீட்டா் தொலைவுக்கு பேருந்துகள் செல்ல முடியாமல் நின்ால் வெளியூா் பக்தா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இதேபோல, பழனி அடிவாரத்தில் பக்தா்கள் 3 கி.மீ. தொலைவு சுற்றி வரும் நிலை ஏற்பட்டதால் அவா்களில் பலா் மயக்கமடைந்தனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →