முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டியில் கிடாய் முட்டுப் போட்டி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:14 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:47 PM

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு கிடாய் முட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பா்கள் சங்கம் சாா்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், திண்டுக்கல், திருச்சி, பழனி, பொள்ளாச்சி,  மதுரை, தேனி, உசிலம்பட்டி,தேவாரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 150-க்கு மேற்பட்ட  கிடாய்கள் பங்கேற்றன.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:14 AM

வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு வத்தலகுண்டுக்கு பெருமை சோ்க்கும் வகையில் வெற்றிலை நாற்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பீரோ, கட்டில், மெத்தை, சில்வா் அண்டா,  கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பொருள்கள் பரிசாக  வழங்கப்பட்டன.  

Advertisement