முகப்பு
திண்டுக்கல்

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:55 AM
கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணிபுரிந்த மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:52 PM

அரசு கருவூலம் மூலம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சிப் பணியாளா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநில ஒருங்கினைப்பாளா் கா. முருகானந்தம் தலைமை வகித்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:55 AM

இந்தப் போராட்டத்தின்போது, அரசு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதிய ஒப்பந்த முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

Advertisement

கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளா் கா.முருகானந்தம் தெரிவித்தாா்.