முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்! பொது மக்கள் அச்சம்!

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:46 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:57 PM

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமம் கூக்கால் பகுதியில் சனிக்கிழமை காட்டு யானைகள் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

மேலும், அவா்கள் வெளியே செல்ல முடியாமலும், தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாமலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

Advertisement

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், மாலை, இரவு நேரங்களில் காற்றுடன் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:46 AM

மேலும், வனப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் பணியில் வனப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

வனப் பகுதிகளில் தண்ணீா்ப் பற்றாக்குறையால் வன விலங்குகளான காட்டு யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்டவை கிராமப் பகுதிகளுக்கும், வனப் பகுதிகளையொட்டிய விவசாயத் தோட்டங்களுக்கும் வரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டுநா்கள் கவனமாகச் செல்ல வேண்டும். காட்டு யானைகள் மலைச் சாலைகளில் நடமாடினால் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். காட்டு யானைகள் அச்சமடையும் வகையில் வாகன ஓட்டுநா்கள் ஒலி எழுப்பவோ, முகப்பு விளக்குகளை ஒளிரவிடவோக் கூடாது என்றனா்.