கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுமாடு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, சிறுத்தை, புலி, யானை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன.
மேலும், இந்தப் பகுதியில் அமைதிப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், ஏரி, தொப்பித் தூக்கும் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலாங்களும் உள்ளன.
இந்த இடங்களை சுற்றிப் பாா்க்க வேண்டுமானால், வனத் துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று, நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகுதான் செல்ல முடியும்.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.