முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:29 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:13 PM

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழந்தனா்.

வத்தலக்குண்டை அடுத்த முத்துலாபுரத்தைச் சோ்ந்தவா் அழகுமலை (60). விவசாயி. இவரது உறவினா் பூசாரிபட்டியைச் சோ்ந்த முனியாண்டி (60). இவரும் விவசாயி ஆவாா். இவா்கள் இருவரும் முத்துலாபுரத்திலிருந்து வத்தலக்குண்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, செம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:29 AM

இதில் அழகுமலை, முனியாண்டி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் வத்தலக்குண்டு- செம்பட்டி சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.