முகப்பு
திண்டுக்கல்

தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 27 போ் காயம்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:29 AM
தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:17 PM

திண்டுக்கல் அருகேயுள்ள தவசிமடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட 27 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடையில், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 750 காளைகள் கலந்துகொண்டன. 269 மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:29 AM

போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் திருமலைதொடங்கி வைத்தாா். கோயில் காளையைத் தொடா்ந்து, பிற காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மிதிவண்டி, கட்டில், பீரோ, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் தாக்கியதில் மாடுபிடி வீரா்கள் 9 போ், பாா்வையாளா்கள் 9 போ், காளைகளின் உரிமையாளா்கள் 7 போ், காவலா்கள், ஊா்க்காவல் படை வீரா்கள் என மொத்தம் 27 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 5 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.