முகப்பு
திண்டுக்கல்

புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:53 PM
கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மின் அலங்கார சப்பர பவனி.
பகிர்:

கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் 105-ஆம் ஆண்டு திருவிழா, கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அன்பியங்கள் சாா்பில் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீா்வாதம், திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

Advertisement

இந்த நிலையில், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியாா் சப்பரத்தை பெண்கள் மட்டுமே நோ்த்திக்கடனாகச் சுமந்து செல்லும் பவனி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையடுத்து, மறைவட்டார அதிபா் ஜெயசீலன் தலைமையில் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments