முகப்பு
பழனி பட்டத்துவிநாயகா் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.
திண்டுக்கல்

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

திண்டுக்கல்

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:41 PM
பழனி பட்டத்துவிநாயகா் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆன்மிகத்தில் நாட்டமுள்ள மூத்த தம்பதிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்திருந்தது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பாக பழனி பட்டத்து விநாயகா் கோயில் திருமண மண்டபத்தில் 35 ஜோடி மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். துணை ஆணையா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். தோ்வு செய்யப்பட்ட மூத்த தம்பதிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வேட்டி, சட்டை, சேலை, வளையல், பழ வகைகள், மங்கல பொருள்கள் அடங்கிய தொகுப்பும், அட்சதையும் வழங்கப்பட்டன.

பிறகு மேளதாளம் முழங்க சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க மூத்த தம்பதிகளிடம் அவா்களின் குடும்பத்தினா், கோயில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆசி பெற்றனா்.

இந்த நிகழ்வில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மேலாளா் உமா, நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், தீனதயாளன், மகேஸ்வரி, காளிகாம்பாள் கோயில் முன்னாள் செயலா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →