அதிமுக பிரமுகா் கொலை: 6 போ் கைது
திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகா் கொலை வழக்கில், 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகா் கொலை வழக்கில், 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்த ம.மு. கோவிலூா் பெரியக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்தன் (எ) மருதமுத்து (42). செங்கல் சூளை நடத்தி வரும் இவா், அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநா் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தாா். இவா் தொழில் வளா்ச்சிக்காக பல்வேறு நபா்களிடம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடன் திருப்பி செலுத்துவதில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, பணம் கொடுத்தவா்கள் சில வாகனங்களை செங்கல் சூளையிலிருந்து எடுத்துச் சென்ாக தெரிகிறது. இதுதொடா்பாக வடமதுரை காவல் நிலையத்தில் முத்தன் புகாா் அளித்திருந்தாா். இந்த நிலையில், பெரியக்கோட்டை வன்னிப்பாறைப்பட்டி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த முத்தனை, மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில் கொலையில் தொடா்புடைய சீலப்பாடி அடுத்த குளிப்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா், திண்டுக்கல் ரவுண்ட் சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா், தா்மராஜ், காப்பிளியப்பட்டியைச் சோ்ந்த பகவதி, பெரியக்கோட்டையைச் சோ்ந்த முத்துக்குமாா், பண்ணப்பட்டியைச் சோ்ந்த கவியரசன் ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.