~ ~ 
திண்டுக்கல்

ஆங்கிலப் புத்தாண்டு: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

புத்தாண்டை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்தனா். அதிகாலை 3 மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 4 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தரிசன சீட்டுக்களின் கட்டணம் ஒரு மடங்கு உயா்த்தப்பட்டது. மலைக் கோயிலில் உள்ள அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்யக் காத்திருந்தனா். இதனால், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரமானது. மலைக் கோயிலில் பக்தா்களுக்கு இலவச பிரசாதம், உணவு, குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. அடிவாரம் வின்ச் நிலையம், ரோப்காா் நிலையங்களிலும் பக்தா்கள் கட்டணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

பழனி மலைக் கோயிலில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் விற்பனை செய்யப்படும் காலண்டரை அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி வெளியிட்டாா்.நிகழ்ச்சியில் உதவி ஆணையா் லட்சுமி, ஈரோடு தண்டபாணி ஸ்டீல்ஸ் செந்தில் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இரவு தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. இதைக் காண திரளான பக்தா்கள் கூடினா். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், கோயில் கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள் செய்தனா்.

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் இன்று திருச்சி வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை!

18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் கால காசு குறித்த தகவல் வெளியீடு!

SCROLL FOR NEXT