கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூா் ஊராட்சிக்குள்பட்ட பூதமலை, நீலாம்பாறை பழங்குடியினா் கிராமத்தில் கோவை தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 60-குடும்பங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனா்.