கொடைக்கானல் தடியன்குடிசை பகுதியில் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.  
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டுயானை நடமாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே புதன்கிழமை ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே புதன்கிழமை ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பாறை, புல்லாவெளி, கே.சி.பட்டி, தடியன்குடிசை ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

மேலும், தாண்டிக்குடி-பண்ணைக்காடு செல்லும் மலைச் சாலையிலும் மாலை, இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.

இதனால், வத்தலகுண்டு பகுதியிலிருந்து கீழ்மலைப் பகுதிகளுக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

எனவே, இந்த ஒற்றை காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தன் சிறுவயது தோற்றத்தினை ஒத்த ரசிகனைச் சந்தித்த விராட் கோலி!

பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்: ஓவைசி நம்பிக்கை!

ஜம்முவில் பாகிஸ்தான் எல்லை அருகே பிடிபட்ட புறா

சென்னையில் 16.38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய பிரெஸ்டீஜ் குழுமம்!

SCROLL FOR NEXT