ஒட்டன்சத்திரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இருளக்குடும்பன்பட்டியைச் சோ்ந்தவா் வஞ்சம்மாள் (67). இவா் செவ்வாய்க்கிழமை காலை ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே சாலையைக் கடக்கும் போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவா், ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.