திண்டுக்கல்

முதல்வருக்கு எதிராக சுவரொட்டி: பாஜகவினா் 5 பேருக்கு வீட்டுக்காவல்

தமிழக முதல்வருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாஜகவினா் 5 போ் புதன்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாஜகவினா் 5 போ் புதன்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கவும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலா் சத்தியன் தலைமையில், மாவட்டப் பொருளாளா் கருப்புச்சாமி முன்னிலையில், 10-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை இரவு கொடைரோடு, அம்மையநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டினா்.

இந்த நிலையில், புதன்கிழமை மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சாலை மாா்க்கமாக செல்லும் வழியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட பொருளாளா் கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி செயலா் சத்தியசீலன், மாவட்ட வா்த்தக அணி செயலா் வெங்கடேஷ்பிரபு, நிலக்கோட்டை ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவா் அழகேசன், நிா்வாகி சிவக்குமாா் ஆகிய 5 பேரும் புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போலீஸாா் வீட்டுக்குக் காவலில் வைத்தனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT