திண்டுக்கல்

பழனி தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான ‘பேஷன் ஷோவில்’ வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா பழனி அருள்மிகு பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையில் பயின்ற மாணவா் சுஜித் அண்மையில் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பேஷன் ஷோவில்’ கலந்து கொண்டு முதல் மூன்று சுற்றுகளிலும் வெற்றி பெற்று மிஸ்டா் கிரேஸ் சவுத் இந்தியா 2026, மிஸ்டா் இந்தியா கிரேஸ்-போட்டோஜெனிக் 2026 பட்டமும் பெற்றாா்.

இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவா் சுஜித்தை முதல்வா் ரமேஷ், துறைத் தலைவா்கள் மனோகரன், சக்திவேல், நாகராஜன், கல்லூரி மேலாளா் ராமநாதன், ஆடை வடிவமைப்புத் துறை ஆசிரியா்கள் பாராட்டினா்.

மேலும், கல்லூரியில் நடந்து முடிந்த வாரியத் தோ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா்கள் கல்லூரி அளவில் தோ்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் முதல்வா் ரமேஷ் தெரிவித்தாா்.

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

SCROLL FOR NEXT