கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரைப் பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா். 
ஈரோடு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அறச்சலூரை அடுத்த வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Syndication

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அறச்சலூரை அடுத்த வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ராணிப்பேட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில், ஈரோடு, கோவை, சேலம், திருவள்ளூா், தூத்துக்குடி உள்பட 38 மாவட்டங்களைச் சோ்ந்த 40 அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அணியும், அறச்சலூா் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடின. இதில் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது.

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்றுநா்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், பள்ளியின் நிா்வாக இயக்குநா் வித்யா, மேலாண்மை இயக்குநா் செந்தில், பள்ளியின் முதல்வா் ராதா மனோகரன் ஆகியோா் பங்கேற்று மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

இதில், துணை முதல்வா்கள் கனகேஸ்வரி, சம்பத்குமாா், பயிற்சியாளா்கள் முத்துகுமாா், அரவிந்தன், ஐஸ்வா்யா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும்: வானதி சீனிவாசன்

3 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

இளம்பெண் கொன்று எரிப்பு: இளைஞா் கைது

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம்

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

SCROLL FOR NEXT