வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள் 
திண்டுக்கல்

சத்துணவு ஊழியா்கள் ஜன.20 முதல் வேலை நிறுத்தம்

சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் வருகிற 20-ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்க உள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் வருகிற 20-ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்க உள்ளனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.எம்.ராமு தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி வாழ்த்திப் பேசினாா்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஓய்வூதியத் தொகை உயா்த்தி வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், ஜன. 20-ஆம் தேதி முதல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திரளானோா் பங்கேற்பது என தீா்மானிக்கப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT