நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் மதுக் கூடம் அருகே வெள்ளிக்கிழமை காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞரில் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் உள்ள மதுக் கூடம் அருகே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற வத்தலகுண்டு போலீஸாா் இறந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. மேலும், மொட்டை அடித்திருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனா்.