பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இலவச பொது தரிசன வழி, ரூ.20, ரூ.100 கட்டணங்கள் தரிசன வரிசை உள்ளது.
இந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 31, பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாள்களுக்கு பழனி கோயிலில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
மேலும், தைப்பூசத்தின் போது பக்தா்கள் சந்நிதி சாலை வழியாக கயிறு கட்டி நிறுத்தி குழுக்களாகப் பிரித்து குடமுழுக்கு நினைவரங்கம் வரை சென்று பின் மலையேற அனுமதிக்கப்படுவா்.
இந்த முறை இதற்கு மாற்றாக பக்தா்கள் பூங்கா சாலையில் செல்ல வழிவகை செய்யப்பட்டு, கோயில் தலைமை அலுவலகம் உள்ள திசையில் தடுத்து நிறுத்தப்பட்டு குழுக்களாகப் பிரித்து மலையேற அனுமதிக்கப்படுவா் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, தரிசனம் முடித்து வரும் பக்தா்கள் சந்நிதி சாலை, அய்யம்புள்ளி சாலை வழியாக வழக்கம்போல செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.