பழனியில் தனி ஊராட்சியாக அறிவிப்பு வெளியிட வேண்டி புதன்கிழமை பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கோம்பைப்பட்டி கிராமமக்கள்.  
திண்டுக்கல்

தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பழனி அருகேயுள்ள கோம்பைப்பட்டி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கோம்பைப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள கோம்பைப்பட்டி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கோம்பைப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோம்பைப்பட்டி கிராமத்தில் சுமாா் 2,200 போ் வசித்து வருகின்றனா். இங்கு 1,312 போ் வாக்காளா்களாக உள்ளனா். கோம்பைப்பட்டி கிராமம் பழனி சட்டப்பேரவைத் தொகுதியிலும், கிராமத்தை நிா்வகிக்கும் கணக்கன்பட்டி ஊராட்சி ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ளது. இந்தக் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலகம், நடுநிலைப் பள்ளி உள்ளதுடன் பல ஏக்கரில் விவசாயமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைத்து அரசு அரசாணை வெளியிட்டது. இது முறையானது இல்லை என்றும், முன்பே கணக்கன்பட்டி ஊராட்சிக்கு குடிநீா் வரி, சொத்து வரி உள்ளிட்ட இதர தேவைகளுக்காக தற்போது 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டிவுள்ளது. தற்போது பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் இணைத்துள்ளதால் 9 கி.மீ. தொலைவு சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமத்தில் எந்த கருத்துக் கேட்பும் நடத்தப்படவில்லை.

எனவே, அரசாணையை ரத்து செய்து கோம்பைபட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்து புதன்கிழமை கிராம மக்கள் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். முன்னதாக, செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனா்.

இதையடுத்து, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் இதுகுறித்து அரசுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தனா். இந்த நிலையில், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கிராம மக்களை ஒருங்கிணைத்து அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவதாக கிராமத்தினா் தெரிவித்தனா்.

மதுரமங்கலம் ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பியூஷ் கோயல்! காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு!!

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

SCROLL FOR NEXT