போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ராசாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன்(44). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முருகனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சத்யதாரா குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.