சிறை 
விருதுநகர்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது

சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் காளிராஜன் (56). தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிராஜனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

திமுகவினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா அறிவுறுத்தல்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

அனைத்து நவீன வசதியுடன் ரூ. 427 கோடியில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கம்!

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT