கொடைக்கானல் வனத் துறை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வன விலங்ககள் நடமாட்டம் அதிகரித்து வருவதை தடுக்கக் கோரியும், வன விலங்குகளால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்து வருவதை தடுக்கக் கோரியும், வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிகளில் வனத்துறையினா் விரட்டாமல் இருப்பதைக் கண்டித்தும் கொடைக்கானல் வனத் துறை அலுவலகம் முன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் சேக் தலைமையில் கண்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.