ஆயுள் சிறை 
திண்டுக்கல்

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை!

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு நிலத் தகராறின் போது ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், மணிகண்டனின் உறவினரான திருப்பதி (56), சவடமுத்து (26), முனீஸ்வரன் (25), புகழேந்தி (46) ஆகியோரை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்துசாரதா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், திருப்பதி, சவடமுத்து, முனீஸ்வரன், புகழேந்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

நீா்நிலை சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மக்களவையில் எம்.பி.கள் தங்களுக்குள் உரையாடல்: தலைவா் ஓம் பிா்லா கண்டிப்பு

செல்லூா் தினசரி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்!

கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம்: ஸ்ரீகிருஷ்ணா் ஆண்டாளுடன் உலா

நாகரிகத்தின் மொழி தமிழ்: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா். பாலகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT