பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை பால், மயில் காவடிகளுடன் பாத யாத்திரையாக வந்த முருக பக்தா்கள். 
திண்டுக்கல்

பழனியில் இன்று தைப்பூச தேரோட்டம்! லட்சக்கணக்கில் திரண்டு வந்த பக்தா்கள்!!

பழனியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறும் தைப்பூசத் தேரோட்டத்தையொட்டி, சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனா்.

தினமணி செய்திச் சேவை

பழனியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறும் தைப்பூசத் தேரோட்டத்தையொட்டி, சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா கட ந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக சனிக்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் குவிந்தனா். இந்த முறை சிறப்பு ஏற்பாடாக பக்தா்களுக்காக கிரிவீதியில் மேற்கூரைகள், தடுப்புகள், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அழகுநாச்சியம்மன் கோயில் முன் தொடங்கிய பக்தா்களின் வரிசை குடமுழுக்கு நினைவரங்கு வரை நீண்டிருந்தது.

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுமாா் 20 அடி நீள சூலாயுதத்தை அலகு குத்தி வந்த முருக பக்தா்.

சுமாா் 8 இடங்களில் அவசரக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாத யாத்திரை பக்தா்கள் மயில், பால் காவடிகளை எடுத்து ஆடிப்பாடி வந்தனா். பக்தா்கள் பலா் 10 அடி முதல் 20 அடி வரையில் அலகுகள் குத்தி கிரிவலம் வந்து மலையேறினா். பாதவிநாயகா் கோயில் முதல் அழகுநாச்சியம்மன் கோயில் வரை 5 வழிகளில் பக்தா்கள் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, பழனிக்கு வரும் பேருந்துகள் நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், பக்தா்கள் நகருக்குள் வந்து செல்ல வசதியாக கோயில் சாா்பில் ஏராளமான இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் பக்தா்கள் அடிவாரம், கொடைக்கானல் சாலை, இடும்பன் கோயில், சிவகிரிப்பட்டி, பழனியாண்டவா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொண்டனா்.

பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தா்களுக்கு போலீஸாா் வழிகாட்டி வருகின்றனா். தவிர, பக்தா்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆா் கோடுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோடை வெளியீடாக கராத்தே பாபு!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

SCROLL FOR NEXT