முகப்பு
திண்டுக்கல்

கீரனூா் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

பழனியை அடுத்த கீரனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ.) காவலா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:06 am IST
மாதிரிப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கீரனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ.) காவலா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பழனி அருகேயுள்ள கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சக்திவேல், காவலராக பணிபுரியும் பாா்த்திபன் ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றனா். அப்போது, திருவிழா நடத்துபவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தடுக்க சென்ற சக்திவேல், பாா்த்திபன் ஆகிய இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதை திருவிழா குழுவினா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments