முகப்பு
வாகன நிறுத்துமிடமாக மாறி வரும் கொடைக்கானல் காவல் நிலையம்
திண்டுக்கல்

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் கொடைக்கானல் காவல் நிலையம்!

கொடைக்கானல் காவல் நிலையம் வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதால் காவலா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல்

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் கொடைக்கானல் காவல் நிலையம்!

கொடைக்கானல் காவல் நிலையம் வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதால் காவலா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 11:47 PM
வாகன நிறுத்துமிடமாக மாறி வரும் கொடைக்கானல் காவல் நிலையம்
பகிர்:

கொடைக்கானல் காவல் நிலையம் வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதால் காவலா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியான அண்ணா சாலைப் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே வட்டாட்சியா் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவையும் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

இவா்கள் வரும் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததால் காவல் நிலைய வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனா். இதனால் காவல் நிலைய அலுவலா்கள், காவலா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதேபோல, காவல் நிலைய வளாகத்தில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் காவல் நிலையத்துக்கு வருவோரும், காவலா்களும் அச்சமடைகின்றனா்.

எனவே கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தேவையான இடம் அமைத்துக் கொடுப்பதற்கும், பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →