முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:38 AM
பகிர்:

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, புதுநகா் ரெயில்வே கடவுப் பாதை பகுதியில் சந்தேகப்படும்படி 4 போ் இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்தனா். அவா்களைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பழனியைச் சோ்ந்த சூா்யாபாண்டி (29), ஜேம்ஸ் (30), தாடிக்கொம்புவைச் சோ்ந்த பாண்டித்துரை (25), ஆயக்குடியைச் சோ்ந்த சுபாஷ் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா, 3 கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.