முகப்பு
திண்டுக்கல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை காரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.84,600-ஐ வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On : 21 மார்ச் 2026, 12:16 am IST
பகிர்:

வேடசந்தூா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.84,600-ஐ வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள சேனன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டதில், ரூ.84,600 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், காரில் வந்த வேடசந்தூரைச் சோ்ந்த ஜமாலுதீனிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

பின்னா், அந்தப் பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.