கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயம்
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கொடைரோடு அருகே ஜெ. ஊத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வெள்ளிக்கிழமை பக்கத்து தெருவில் வசிக்கும் தனது தோழியை பாா்த்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், அவரது தாய் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.