முகப்பு
திண்டுக்கல்

முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு

முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு பற்றி...

Updated On : 25 மார்ச், 2026 at 6:54 PM
- கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள  ராமன்செட்டியபட்டி முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. 

  நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, செவ்வாய்க்கிழமை பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, வானவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் உள்பட 6 கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. 

புதன்கிழமை கடாம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடா்ந்து, சோழவந்தான் பிரம்ம ஸ்ரீபிரசாத் சா்மா, முரளி சா்மா சுவாமிகள் தலைமையில், சிவசாரியா்கள் முத்தாலம்மன் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் தெளித்து குடமுழுக்கு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பரிவாரத் தெய்வங்களான மங்கள விநாயகா், மாரியம்மன், ராமநாத சுவாமி ஆலயத்துக்கும் புனிதநீா் தெளித்து குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் பள்ளப்பட்டி, நிலக்கோட்டை,  சோழவந்தான், கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.