4 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு வாய்ப்பு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்க்கிழமை), ஏப். 1(புதன்கிழமை), ஏப். 3 (வெள்ளிக்கிழமை), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றாா் அவா்.