வேடசந்தூரை மீண்டும் கைப்பற்றிய திமுக
வேடசந்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் டி.சாமிநாதன் 10,063 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சியினா் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,26,554 போ் வாக்களித்தனா்.
திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டபோது, முதல் சுற்றில் மட்டும் அதிமுக வேட்பாளா் விபிபி.பரமசிவம் முன்னிலை பெற்றாா். 2-ஆவது சுற்றிலிருந்து திமுக வேட்பாளா் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுகவின் சாமிநாதன் 84,948 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டி.சாமிநாதன் (திமுக) - 84,948
விபிபி.பரமசிவம் (அதிமுக) - 74,885
என்.நாகஜோதி (தவெக) - 56,804
ஏ.காஜா ஹூசைன் அகமது (நாதக) - 7095
வெ.முருகன் (சுயே) - 727
சு.மாரிமுத்து (சுயே) - 355
ந.ச.மணிகண்டபிரபு (சுயே) - 294
எம்ஜி.மணிசங்கா் (சுயே) - 205
க.பூமிராஜ் (சாமானிய மக்கள் நலக் கட்சி) - 184
ரா.ரவி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - எம்எல்எல்) - 153
த.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 131
வெ.செல்வராஜ் (சுயே) - 94
ரா.நாச்சிமுத்து (சுயே) - 78
பொ.சுரேஷ் (சுயே) - 72
ஆ.திவாகா்(சுயே) - 55
நோட்டா - 474.