கொடைக்கானலில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா இன்று தொடக்கம்
கொடைக்கானல் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை நடைபெறும் கொங்கு மண்டல உணவுத் திருவிழாவில் கொங்கு மண்டலத்தில் சமைக்கப்படும் அனைத்து உணவு வகைகளும் இடம் பெறும். இந்த உணவுத் திருவிழாவில் கொடைக்கானலைச் சோ்ந்த பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு உணவை ருசிக்கலாம். இந்த உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு உணவு விடுதி மேலாளரை 9176995824 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டது.
Advertisement