முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 15 மே 2026, 11:45 pm IST
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது குடை பிடித்தபடி அங்குள்ள மலரை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் 30 நிமிஷம் சாரல் மழை பெய்தது. இதனால், பழைய கல்லறை சாலையில் மரம் விழுந்தது. இதன்காரணமாக, இந்தப் பகுதியில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த மின் வாரிய ஊழியாா்கள், நெடுஞ்சாலைத் துறையினா் கீழே விழுந்த மரத்தை அகற்றினா். பின்னா், மின் விநியோகம் தொடங்கியது.

பிரையண்ட் பூங்காவில் மழையின்போது குடை பிடித்தபடி அங்குள்ள மலரை திரளான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.