மதுரை

அரசு வழக்குகளில் வாதாடியதற்கான கட்டணத்தை வழங்கக் கோரி மூத்த வழக்குரைஞர் மனு

DIN

அரசு வழக்குகளில் ஆஜராகி வாதாடியதற்கான நிலுவையில் உள்ள கட்டணத் தொகையை வழங்கக் கோரி மூத்த வழக்குரைஞர் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூத்த வழக்குரைஞராக பணியாற்றி வருபவர் செல்லப்பாண்டியன். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 நான் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 156 உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பாக ஆஜராகி வாதாடினேன். இதற்காக எனக்கு சேர வேண்டிய கட்டணம் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே அந்தத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரருக்கு இதுவரை ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
 இதைப் பதிவு செய்த நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT