மதுரை

துப்பாக்கி தொழிற்சாலை வேலைக் குழு நியமன தேர்தல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை வேலைக்குழு உறுப்பினர் நியமனத்துக்கான தேர்தலில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலை நிர்வாகம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனு: திருச்சியில் செயல்படும் துப்பாக்கித் தொழிற்சாலையில், 2017-19ஆம் ஆண்டுக்கான வேலைக்குழு உறுப்பினர் நியமனத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 வேலைக்குழு உறுப்பினர் நியமனத்தில் பெண்களுக்கென இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
பெண்களுக்கு இரு இடங்கள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, வேலைக்குழு உறுப்பினர் நியமனத் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்து, பெண் ஊழியர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கை குறித்து துப்பாக்கித் தொழிற்சாலையின் பொதுமேலாளர், தேர்தல் அலுவலர் ஆகியோர் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT