முகப்பு
மதுரை

சாலை விபத்தில் இளைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தொழிற்சாலையில் இரவுப்பணி முடிந்து புதன்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் ராஜபிரபு அய்யங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார்.
நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நான்குவழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜபிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →