மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 90.11 லட்சம்

DIN

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மற்றும் உப கோயில் உண்டியல்களில் ரூ. 90.11 லட்சம் ரொக்கம் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.
  மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களான மாரியம்மன், முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில் உள்ளிட்டவற்றில் செப்டம்பர் மாத உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.  
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணைஆணையர் என்.நடராசன் முன்னிலையில் எண்ணிக்கை நடைபெற்றது.
 இதில், கோயில்பணியாளர்கள்,  பக்தர்கள் பேரவையினர்,  வங்கி அலுவலர்கள், மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
 ரூ.90.11 லட்சம் ரொக்கம்,  601 கிராம் தங்கப் பொருள்கள், 2 கிலோ 264 கிராம் வெள்ளிப் பொருள்கள் , 1 கிலோ 415 கிராம் பிரதமை தகடுகள், 5 கிலோ 650 கிராம் பித்தளை பொருள்கள், 491 டாலர்கள் வெளிநாட்டுப் பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT