பெண் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி செல்லிடப்பேசி பறிப்பு
மதுரையில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேர் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேர் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகமலை புதுக்கோட்டை திருவேணி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (42). இவரது மனைவி சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், டிவிஎஸ் பூங்கா அருகில் ராஜசேகர் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர் ராஜசேகரை வழிமறித்து செல்லிடப்பேசியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், மூவரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.