முகப்பு
மதுரை

வைகை ஆற்றில் தண்ணீர்: பக்தர்கள் மகிழ்ச்சி

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரையை வந்தடைந்தது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரையை வந்தடைந்தது. 
      கள்ளழகர் வைகை ஆற்றில் திங்கள்கிழமை அதிகாலை எழுந்தருள்கிறார். இதற்காக, வைகை அணையிலிருந்து சனிக்கிழமை விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏற்கெனவே, மதுரை குடிநீருக்காக விநாடிக்கு 48 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரும் நிலையில், அழகர் ஆற்றில் இறங்குவதற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து விநாடிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.       வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை இரவுதான் மதுரை மாநகராட்சி எல்லையை வந்தடைந்தது. ஆற்றில் அழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் பகுதிக்கு தண்ணீர் நள்ளிரவில் வந்து சேர்ந்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →