மதுரை

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு:தனியார் நிறுவன ஊழியர் சாவு

DIN

மதுரையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மதுரை ஆரப்பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுந்தர்(55). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுந்தர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் குணமாகாததைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சுந்தருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் வைத்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தர் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, கடந்த சில வாரங்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இல்லை.   தற்போது பன்றிக்காய்ச்சலால் இறந்த சுந்தர் பன்றிக் காய்ச்சல் முற்றிய நிலையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். இதனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவரை குணப்படுத்தியிருக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT