மதுரை

தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கு தனியாக பட்டமளிப்பு விழா: துணைவேந்தர்

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்குத் தனியாகப் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் ஆங்கிலம் மற்றும் வணிகவியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:
 தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களும் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.  காமராஜர் பல்கலைக் கழகத்தின்  தொலைநிலைக் கல்வியில் ஏராளமான படிப்புகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கும் தனியாக பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்றார்.
 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ராதாகிருஷ்ணன், தொலைநிலைக் கல்வி இணை தேர்வாணையர் ஆ.ராஜராஜன், பல்கலைக்கழக ஆலோசகர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். காமராஜர் பல்கலை.யின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட தொலைநிலைக் கல்வி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT