கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனைக் கண்காட்சி
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் கே.கே.நகர் லட்சுமி அரசு திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனைக் கண்காட்சியை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியரா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் கே.கே.நகர் லட்சுமி அரசு திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனைக் கண்காட்சியை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியரா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், மென்பட்டு சேலைகள், கண்டாங்கி சேலை, கைத்தறி சுங்கடி சேலைகள், காஞ்சி காட்டன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் ஆண்களுக்கான லினன் சட்டைகள், லினன்- பருத்தி சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறப்புக் கண்காட்சியையொட்டி ஜவுளி ரகங்களில் இரண்டு வாங்கினால், அதே மதிப்பில் இன்னொரு ஜவுளி ரகம் இலவசமாக வழங்கப்படும். கைக் குட்டை முதல் பட்டுச் சேலை வரை அனைத்து ஜவுளிகளுக்கும் இத் திட்டம் பொருந்தும்.
ஒன்று மட்டும் வாங்குபவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். இந்த கண்காட்சி மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ரூ.10 லட்சத்துக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, மண்டல மேலாளர் ஜே.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.