முகப்பு
மதுரை

ஜயேந்திரர் படத்துக்கு மலரஞ்சலி

மதுரையில் ஸ்ரீ ஜயேந்திரர் சுவாமி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மதுரையில் ஸ்ரீ ஜயேந்திரர் சுவாமி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுவாமி திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, தீப வழிபாடும் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் திருச்சி கல்யாண ராமன், எழுத்தாளர் இந்திரா செüந்தரராஜன் ஆகியோர் சுவாமிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
 அனுஷத்தின் அனுகிரஹம் தலைவர் வி.ராமகிருஷ்ணன், காஞ்சி சங்கரமடம் மதுரையின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், மதுரை ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சீனிவாசன், ஆடிட்டர் எச்.ஆதிஷேசன் மற்றும் நிகழ்ச்சி மேலாளர் நெல்லை பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
 மதுரை ஆதீனம் இரங்கல்: ஜயேந்திரர் சித்தியடைந்தது சைவ சமயத்துக்கு பேரிழப்பாகும். தென்காசி மீனாட்சிபுரம் மத மாற்றப் பிரச்னையில் சமரச முயற்சி பேச்சுவார்த்தைக் குழுவில் சுவாமி இடம் பெற்றிருந்தார். சமபந்தி போஜனத்திலும் அவர் பங்கேற்றார். அதேபோல, மண்டக்காடு கலவர சமரச முயற்சிக்கும் அவர் உறுதுணையாக இருந்தார். சைவ சமய பிரசாரம், கல்வி, தமிழ் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது பக்தர்கள், சங்கர மடத்தின் நலன் விரும்பிகள் உள்ளிட்டோருக்கு இரங்கலைத் தெரிவிக்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜயேந்திரர் மக்களை நோக்கி சென்று ஆன்மிகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்.
 மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் செயல்பட்டவர். ஆன்மிகம், சமுதாய சேவை இரண்டையும் இரு கண்களாக பாவித்தவர் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →