மதுரை

மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட  அளவிலான தடகளப் போட்டிகள் அறிவிப்பு

DIN

மதுரை மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்டத்  தடகளப் போட்டிகள் மார்ச் 17-ஆம் தேதி தொடங்குகின்றன.
   இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த.ராஜகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  
  தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உலகத் தரத்துக்கு இணையான விளையாட்டு வீரர்களை கண்டறியும் வகையில் பள்ளியில் பயிலும் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக தடகளப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.  கல்வி மாவட்ட அளவிலல் இப்போட்டிகள் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகின்றன. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்காக அப்போட்டி நடைபெறும்.  அதே நாளில் மதுரை கல்வி மாவட்டத்துக்கான தடகளப் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர்.  விளையாட்டு அரங்கில் (ரேஸ்கோர்ஸ்)  நடைபெறும்.  மார்ச் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) மேலூர் கல்வி மாவட்டத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
  போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான தகுதியாக 6 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் 1.1.2005 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர் 1.1.2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருத்தல்வேண்டும். எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் 1.1.2003 அன்றோ அல்லது அதற்குப்பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் அவசியம்.
  போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகியவை நடத்தப்படும். 
 போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படமாட்டாது. வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். தேர்வாகும் வீரர், வீராங்கனைகள் மண்டல போட்டிகளுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர். மண்டல அளவில் முதல் 10 இடங்களுக்குள் பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் போட்டி நடக்கும் நாளன்று காலை 7 மணிக்கு அந்தந்த இடங்களில் நேரில் ஆஜராகவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT